அரசியல் கட்சியில் இணைகிறாரா ஹர்பஜன் சிங்..?

எதிர்காலத் திட்டம் என்பது நான் முடிவு செய்யாத ஒன்று என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் நேற்று ஓய்வை அறிவித்தார். ஹர்பஜன் சிங் அரசியல் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேச்சுக்கள் எழுந்து வந்தன. அவரது சொந்த மாநிலமான பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அவர் அரசியலில் இணையக்கூடும் என கருத்துகள் பரவி வருகின்றன.
இந்தநிலையில் இதுபற்றி ஹர்பஜன் சிங் கூறியதாவது;
"எதிர்காலத் திட்டம் என்பது நான் முடிவு செய்யாத ஒன்று. நான் தொடர்ந்து கிரிக்கெட்டுடன் இணைந்தே இருப்பேன். கிரிக்கெட் மூலமே மக்கள் என்னை அறிந்துள்ளனர்.எனது அரசியல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில்... அது நடக்கும் போது அனைவருக்கும் தெரிவிப்பேன்"என்றார்.
மேலும், எனக்கு அனைத்து கட்சி அரசியல்வாதிகளையும் தெரியும். நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன். அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”என்றார்.
Related Tags :
Next Story