ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு


ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு
x
தினத்தந்தி 3 Feb 2022 6:47 PM IST (Updated: 3 Feb 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

ஓவைசி சென்ற கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

மீரட்,

உத்தரபிரதேசத்தில் அசாதுதீன் ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஏ ஐ எம் ஐ எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி இன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, 4 பேர் திடீரென கார் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் துப்பாக்கியை வைத்துவிட்டு தப்பி ஓடினர்.  அதில் காரின் டயர்கள் பஞ்சர் ஆயின.

அதன்பின் அவர் பாதுகாப்பாக வேறு காரில் ஏறி சென்றுள்ளார். இதனை ஓவைசி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story