பஞ்சாப் சட்டசபை தேர்தல்: நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்


பஞ்சாப் சட்டசபை தேர்தல்: நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
x
தினத்தந்தி 4 Feb 2022 3:07 PM IST (Updated: 4 Feb 2022 3:07 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

5  மாநிலத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திற்கு வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் 30 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், பூபேஷ் பாஹேல், அசோக் கெலாட், சச்சின் பைலட், நவ்ஜோத் சிங் சித்து, பூபிந்தர் சிங் ஹூடா, ஆனந்த் ஷர்மா, ரன்தீப் சிங் சுராஜ்வாலா உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

Next Story