விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கு; நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன்


விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கு; நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன்
x
தினத்தந்தி 7 Feb 2022 3:36 PM IST (Updated: 7 Feb 2022 4:43 PM IST)
t-max-icont-min-icon

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்டோருக்கு கேரள ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.

கொச்சி,

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை கடத்தி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரையும் கைது செய்தனர். கைதான திலீப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 
இதனிடையே, ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப், நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் திலீப் மேலும் 5 பேர் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் மற்றும் ஐந்து பேர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜனவரி 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. எப்ஐஆரில் திலீப் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பாலச்சந்திர குமாரின் வாக்குமூலமே தனக்கு எதிரான ஆதாரமாக அரசு தரப்பில் உள்ளது என்றும் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் அதிகாரியை மிரட்டியதாக அரசு தரப்பு கூறியதை நடிகர் மறுத்தார். இந்நிலையில் திலீப் சனிக்கிழமை  ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை விசாரித்து வந்த கேரள ஐகோர்ட் “திலீப் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,நடிகர் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு ஜாமீன்களை தாக்கல் செய்ய வேண்டும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சில நிபந்தனைகளை விதித்து நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
1 More update

Next Story