முஸ்லீம் மாணவிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது: ஓவைசி விமர்சனம்

கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது
ஐதராபாத்,
கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழலை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து ஐதராபாத் தொகுதி எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான ஓவைசி கூறியிருப்பதாவது:- பர்தா அணிவதற்கான உரிமைக்காகப் போராடும் சகோதரிகளின் போராட்டம் வெற்றிபெற நான் பிரார்த்திக்கிறேன்.
கர்நாடகத்தில் அரசியலமைப்பின் 15, 19 மற்றும் 21 ஆகிய விதிகள் மீறப்பட்டுள்ளன. கர்நாடக பாஜக அரசின் முடிவை நான் கண்டிக்கிறேன். மாணவிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது முற்றிலும் தவறானது” என்றார்.
Related Tags :
Next Story