உடல்நலம் குறித்த வதந்தி: ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நிராகரித்தார்

ஆளும் பிஜு ஜனதா தள தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக், நேரடி பிரசாரத்துக்கு செல்லவில்லை.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் 3 அடுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் நிலையில், ஆளும் பிஜு ஜனதா தள தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக், நேரடி பிரசாரத்துக்கு செல்லவில்லை. காணொலி வாயிலாகவே பேசினார். கொரோனா தொற்று காரணமாக அவர் இந்த வழிமுறையை பின்பற்றினார். தனது முதல்-மந்திரி அலுவலகத்துக்கும் 2 ஆண்டுகளாக செல்லவில்லை.
இந்நிலையில், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது.
அது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் முழு உடல்நலத்துடன் இருக்கிறேன். ஒடிசா மக்களுக்கு தொடர்ந்து சேவை புரிவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story