மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மணிப்பூர் மாநில முதல் மந்திரி பைரன் சிங் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இம்பால்,
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
இதில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் பாஜக-வும், 6 தொகுதிகளில் காங்கிரசும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் போட்டியிட்ட ஹீங்காங் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் பங்கேஜம் சரத்சந்திர சிங்கை விட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story