காங்கிரஸ் - இடதுசாரி மாணவர் அமைப்பினர் இடையே மோதல் - தரதரவென இழுத்து சென்று பெண் மீது கொடூர தாக்குதல்


காங்கிரஸ் - இடதுசாரி மாணவர் அமைப்பினர் இடையே மோதல் - தரதரவென இழுத்து சென்று பெண் மீது கொடூர தாக்குதல்
x
தினத்தந்தி 16 March 2022 5:52 PM IST (Updated: 16 March 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு இடையே நடந்த மோதலில் பெண் படுகாயமடைந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் பங்கேற்றன. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இரு கட்சியின் மாணவர் அமைப்பிற்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. 

அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் அமைப்பின் யூனியன் தலைவரான ஷபீனா யாக்கூப் என்ற பெண்ணை இடதுசாரி கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். யாக்கூப்பை தரதரவென இழுத்து அவரை கடுமையாக தாக்கினர். மேலும், கேரள மாணவர் அமைப்பை சேர்ந்த மேலும் சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.



இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story