வருகிற 26-ந் தேதி முதல் இந்தியா-வங்காளதேச ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கும், குல்னாவுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கும், குல்னாவுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக, இந்த ரெயில் போக்குவரத்து கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது தொற்று கட்டுப்பாட்டில் வரத்தொடங்கி இருப்பதால் இந்த ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதன்படி, வருகிற 26-ந் தேதி முதல் இந்த ரெயில்கள் மீண்டும் தங்கள் சேவையை தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த அட்டவணைப்படி இந்த ரெயில்கள் இயங்கும் என இரு நாட்டு ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story