ஓவைசி கட்சியுடன் கூட்டணி கிடையாது - சிவசேனா

ஓவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மும்பை,
எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, " நாங்கள் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஏனெனில் அவுரங்கசீப் முன் குனியும் எந்த நபருடனும் நாங்கள் கைகோர்க்க மாட்டோம். சத்ரபதி சிவாஜி, சம்பாஜி மகாராஜை பின்தொடரும் எவரும் அந்த கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டார்கள். " என்றார்.
பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் சேர வேண்டும் என கூறப்பட்டு வருவது குறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்துகட்சிகளும் சேருகின்றன. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் ஒன்றாகட்டும், நாட்டு மக்கள் மோடியை விரும்புகின்றனர். மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள். " என்றார்.
Related Tags :
Next Story