நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐநாக்ஸ் இணையவுள்ளதாக அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 March 2022 7:02 PM IST (Updated: 27 March 2022 7:02 PM IST)
t-max-icont-min-icon

இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் லிமிலெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு நிறுவனங்கள் இணைந்த நிலையில், தற்போது இந்த திரையரங்குகள் அனைத்தும் பிவிஆர்-ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிவிஆர் நிறுவனத்திற்கு 73 நகரங்களில் 871 திரையரங்குகளும், ஐநாக்ஸ் நிறுவனத்திற்கு 72 நகரங்களில் 675 திரையரங்குகளும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் இரு நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரு நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளது.


Next Story