குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


குருவாயூர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 11 April 2022 2:18 AM IST (Updated: 11 April 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.


திருவனந்தபுரம்

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணசாமி கோவிலுக்கு கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர், ‘குருவாயூர் கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும்’ என்றும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக கோவிலுக்கு விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

Next Story