அமிர்தசரஸ் மாவட்டத்தில் குண்டு வெடிப்பு சிறுவன் பலி - 2 பேர் படுகாயம்


அமிர்தசரஸ் மாவட்டத்தில் குண்டு வெடிப்பு சிறுவன் பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 April 2022 11:28 AM IST (Updated: 18 April 2022 11:28 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் நடந்த குண்டு வெடிப்பில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அஜ்னாலா மாவட்டத்தில் உள்ள கோட்லா கசியான் கிராமத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவரின் வயது 15 வயதுக்கு குறைவாக இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்று உள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story