கொரோனா தடுப்பூசி பணி; 12-14 வயதுக்கு உட்பட்ட 60% பேருக்கு நிறைவு

இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் மார்ச் 16ந்தேதி முதல் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களால் நாங்கள் அனைவரும் பெருமை அடைகிறோம். இந்த தருணம் தொடரட்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இதன்படி, நாட்டில் இதுவரை 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 2.86 கோடி பேருக்கு (2,86,98,710) முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது. 65 லட்சத்து 99 ஆயிரத்து 218 பேருக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இதுவரை 189.17 கோடி பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,95,267 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story