பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது


பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது
x

பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

கொள்ளேகால்:-

பிளிகிரிரங்கணபெட்டா

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவில் பிளிகிரிரங்கணபெட்டா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி புலிகள் காப்பகமாகவும் உள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் கடந்த 1939-ம் ஆண்டு முதல் முறையாக பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் 139 பறவை இனங்கள் வசிப்பது தெரியவந்தது. கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு 272 பறவை இனங்கள் வசிப்பது தெரியவந்தது. அதன்பிறகு பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்து வந்தது.

பறவைகள் கணக்கெடுப்பு பணி

இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிளிகிரிரங்கணபெட்டா புலிகள் காப்பக பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. இந்த கணக்கெடுப்பில் 50 தன்னார்வலர்கள், 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கலந்துகொண்டனர். அவர்கள் 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

பைனாகுலர், கேமராக்கள் மூலம் பறவை இனங்களை கணக்கெடுத்தனர். இந்த கணக்கெடுப்பில் தாண்டேலி வனப்பகுதியில் அதிகம் காணப்படும் கிரேட் ஹார்ன்பில் பறவை இனம் காணப்பட்டது. மொத்தம் 274 பறவை இனங்கள் இங்கு வசிப்பது தெரியவந்துள்ளது. புலம்பெயர்ந்த நார்த்தன் ஷோவலர், நார்த்தன் பின்டெயில் ஆகிய பறவை இனங்கள் புதிதாக பிளிகிரிரங்கணபெட்டாவுக்கு வந்துள்ளன.

யதுவீர்

4 நாட்கள் நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த நிறைவு விழாவில் மைசூரு மன்னர் யதுவீர் கலந்துகொண்டு, தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


Next Story