'ஷூ'வில் பதுங்கிய நாகபாம்பு

சிவமொக்காவில் ‘ஷூ’வில் பதுங்கி இருந்த நாகபாம்பு பிடிப்பட்டது.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் பொம்மனகட்டே பகுதியில் வசித்து வருபவர் குமார். இவர் நேற்று காலை நடைபயிற்சிக்கு செல்வதற்காக வீட்டின் வெளியில் வைத்திருந்த 'ஷூ'வை எடுத்துள்ளார். அப்போது அந்த 'ஷூ'வில் இருந்து 'புஸ்... புஸ்...' என சத்தம் கேட்டு உள்ளது.
இதனால் அவர் 'ஷூ'வை பார்த்தார். அப்போது அதனுள் நாகபாம்பு ஒன்று சுருண்டு பதுங்கி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக பாம்புபிடி வீரர் கிரணுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கிரண் விரைந்து வந்து, 'ஷூ'வுக்குள் சுருண்டு இருந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பு 7 அடி நீளம் இருந்தது. இதையடுத்து ஒரு பையில் போட்டு அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டார். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story