பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய சமையல்காரர்

பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பெண் அதிகாரி மீது சமையல்காரர் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கியுள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இந்திய விமானப்படைத்தளம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் விமானப்படை பெண் அதிகாரி மீது அதே விமானப்படைத்தளத்தில் சமையல் வேலை செய்துவரும் நபர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் பெண் அதிகாரி மீது சமையல்காரர் சரமாரி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த பெண் அதிகாரி உடனடியாக சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தாக்குதல் நடத்திய சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story