சத்தீஸ்கரில் நக்சலைட் ஒழிப்பு போலீஸ்காரர் தற்கொலை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்


சத்தீஸ்கரில் நக்சலைட் ஒழிப்பு போலீஸ்காரர் தற்கொலை  துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 7 Oct 2022 4:15 AM IST (Updated: 7 Oct 2022 4:16 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கர் மாநிலம் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது.

பிஜபூர்,

சத்தீஸ்கர் மாநிலம் நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இங்கு நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்காக சத்தீஸ்கர் ஆயுதப்படை (சி.ஏ.எப்.) என்ற சிறப்பு போலீஸ் பிரிவு செயல்படுகிறது. இந்த நக்சலைட் ஒழிப்பு படைப்பிரிவில் வேலை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது பெயர் சுனில்குமார். சத்தீஸ்கர் ஆயுதப்படையின் 15-வது பட்டாலியனில் வேலை பார்த்த அவர், நேற்று முன்தினம், பகல் 11 மணிக்கு பாதுகாப்பு பணிக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சுனில்குமாரின் சொந்த ஊர் மத்திய பிரதேசத்தில் உள்ளது.

அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story