விளையாட்டு மைதானம் அமைக்க கோரி தமிழ் மக்கள் போராட்டம்


விளையாட்டு மைதானம் அமைக்க கோரி   தமிழ் மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு மைதானம் அமைக்க கோரி தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு: பெங்களூரு கோரமங்களா பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஒரு லட்சம் தமிழர்கள்

பெங்களூரு கோரமங்களா ராஜேந்திரநகர், சாஸ்திரிநகர், அம்பேத்கர் நகர், எல்.ஆர்.நகர், சமதா நகர் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் குடிநீர், சாக்கடை கால்வாய் உள்பட எந்தவித அடிப்படை வசதியும் அரசு சார்பில் ஏற்படுத்தி தரவில்லை. மேலும் மேற்கண்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆனால் அந்த குழந்தைகள் விளையாடும் வகையில் மைதானமும் இல்லை.

இதனால் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு சுதந்திர பூங்காவில் விடுதலை சிறுத்ைத கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த அமைப்பின் தலைவர் நரசிம்மன் தலைமையில் நடந்த போராட்டத்தில், மைதானத்திற்காக போராடி வரும் போராட்ட குழு தலைவர் டேவிட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மாரி உள்ளிட்ட பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளைநிறைவேற்ற வேண்டும்

போராட்டத்தின் போது விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

பின்னர் கட்சியின் பிரமுகர் மாரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோரமங்களாவில் இருந்த பாஸ்போர்ட் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த ஒரு ஏக்கர் 14 சென்ட் நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது ஆகும்.

எங்கள் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் விளையாட விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் மிகுந்த வாலிபர்களும் எங்கள் பகுதியில் உள்ளனர். ஆனால் அவர்கள் முறையாக பயிற்சி செய்ய மைதானம் இல்லை. இதனால் மாநகராட்சி வசம் இருக்கும் ஒரு ஏக்கர் 14 ெசன்ட் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர எங்களின் மேலும் 12 அம்ச கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story