டெல்லி: கடந்த 12 நாட்களில் முதல் முறையாக 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

கோப்புப்படம்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,227 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 8,421 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 85 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,130 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,51,914 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 519 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 389 ஆக அதிகரித்துள்ளது.