'பைக் டாக்சி'க்கு தடை விதிக்க கோரி விதானசவுதாவை முற்றுகையிட முயன்ற ஆட்டோ டிவைர்கள்


பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி விதானசவுதாவை முற்றுகையிட முயன்ற ஆட்டோ டிவைர்கள்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘பைக் டாக்சி’க்கு தடை விதிக்க கோரி விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற ஆட்டோ டிரைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பெங்களூரு:

'பைக் டாக்சி'க்கு தடை

பெங்களூருவில் 'ரேபிடோ' என்ற தனியார் நிறுவனத்தின் 'பைக் டாக்சி' சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த 'பைக் டாக்சி' சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறி வருகின்றனர். மேலும் 'பைக் டாக்சி'க்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் 'பைக் டாக்சி'க்கு தடை விதிக்க கேட்டது தொடர்பான ஒரு வழக்கு கர்நாடக ஐகோர்ட்டிலும் நடந்து வருகிறது. இந்த நிலையில் 'பைக் டாக்சி'க்கு அரசு உடனடியாக தடை விதிக்க கோரி பெங்களூரு சுதந்திர பூங்காவில் 29-ந் தேதி (அதாவது நேற்று) பெங்களூரு ஆட்டோ டிரைவர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

விதான சவுதாவுக்குஊர்வலமாக...

அதன்படி நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் வைத்து 'பைக் டாக்சி'க்கு தடை விதிக்க கோரி ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 'பைக் டாக்சி'க்கு எதிராக கோஷங்களை ஆட்டோ டிரைவர்கள் எழுப்பினர். இந்த சந்தர்ப்பத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோக்களை வழிமறித்த டிரைவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டு கொண்டனர். மேலும் ஆட்டோவில் இருந்த பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறங்கிவிடவும் முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சுதந்திர பூங்காவில் இருந்து விதான சவுதாவை முற்றுகையிட ஆட்டோ டிரைவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை சுதந்திர பூங்காவில் வைத்து இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ டிரைவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இரும்பு தடுப்பு கம்பிகளை தள்ளி கொண்டு செல்ல முயன்றனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களை கைது செய்த போலீசார் அவர்களை 3 பஸ்களில் ஏற்றி சென்றனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story