பசவராஜ் பொம்மைக்கு இன்று கொரோனா பரிசோதனை


பசவராஜ் பொம்மைக்கு இன்று கொரோனா பரிசோதனை
x

பசவராஜ் பொம்மைக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 6-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் டெல்லி பயணத்தை ரத்து செய்ததுடன், பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வருகிறார். மாநிலத்தில் மழை பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story