9 நகரங்களில் 'சதம்' அடித்த வெயில்


9 நகரங்களில் சதம் அடித்த வெயில்
x
தினத்தந்தி 19 May 2023 12:00 AM IST (Updated: 19 May 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு புறநகர், கலபுரகி, கொப்பல், பல்லாரி உள்பட 9 நகரங்களில் வெயில் சதம் அடித்தது.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநிலத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. நேற்று கலபுரகி, கொப்பல், பல்லாரி, ஹாவேரி, ராய்ச்சூர், விஜயாப்புரா, கதக், சித்ரதுர்கா, பெங்களூரு புறநகர் ஆகிய 8 நகரங்களில் வெயில் 'சதம்' அடித்தது. அதிகபட்சமாக கலபுரகியில் 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் பின்வருமாறு:-

கார்வார் - 96.62 டிகிரி

மங்களூரு - 94.46 டிகிரி

பெலகாவி - 98.96 டிகிரி

பீதர் - 98.6 டிகிரி

விஜயாப்புரா - 102.56 டிகிரி

பாகல்கோட்டை - 99.68 டிகிரி

தார்வார் - 99.32 டிகிரி

கதக் - 102.2 டிகிரி

கலபுரகி - 105.26 டிகிரி

ஹாவேரி - 101.12 டிகிரி

கொப்பல் - 104.9 டிகிரி

ராய்ச்சூர் - 95.9 டிகிரி

பெங்களூரு ஏர்போர்ட் - 96.08 டிகிரி

பெங்களூரு புறநகர் - 100.76 டிகிரி

பல்லாரி - 105.08 டிகிரி

சிக்கமகளூரு - 87.8 டிகிரி

சித்ரதுர்கா - 100.04 டிகிரி

தாவணகெரே - 99.68 டிகிரி

ஹாசன் - 94.28 டிகிரி

சிந்தாமணி - 97.88 டிகிரி

மண்டியா - 98.6 டிகிரி

மடிகேரி - 89.24 டிகிரி

மைசூரு - 97.16 டிகிரி

சிவமொக்கா - 97.88 டிகிரி


Next Story