டெல்லியில் 3 நாட்களில் இருமடங்கான கொரோனா பரவல் விகிதம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,118- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,118- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.50 சதவீதத்தை தாண்டியிருக்கிறது.
கடந்த மே 11 ஆம் தேதி பாதிப்பு விகிதம் 3.34 சதவிகிதமாக இருந்த நிலையில், வெறும் 3 தினங்களில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 14 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26,223 ஆக உள்ளது.
Related Tags :
Next Story