கொல்கத்தாவில் விளையாட்டு செயலிகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் தலைமறைவு

இந்த நிதிமோசடி வழக்கில் தொடர்புடைய கொல்கத்தவை சேர்ந்த தொழிலதிபர் தலைமறைவாகியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆன்லைன் விளையாட்டு செயலிகள் மூலம் நிதி மோசடி நடைபெறுவதாக கொல்கத்தா போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த மோசடி செயலி நிறுவனங்கள் மற்றும் முகவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 6 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியுள்ளது. மிகப்பெரிய அளவில் பணம் சிக்கியதால் அதிர்ச்சியடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இந்த நிதிமோசடி வழக்கில் தொடர்புடைய கொல்கத்தவை சேர்ந்த தொழிலதிபர் தலைமறைவாகியுள்ளார். எனவே போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆமிர் கான் என்ற அந்த நபர் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.