குடகு மாவட்டத்தில் அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு இலவச ஊட்டச்சத்து பொருட்கள்;கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.

குடகு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு இலவச ஊட்டச்சத்து பொருட்களை கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
குடகு;
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் 9 வயது வரையிலான குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசு சார்பில் மதிய உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டச்சத்திற்கு தேவையான உணவு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதல் ஊட்டசத்து பொருட்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதன்படி மாநில அரசு குடகு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டசத்து உணவு பொருட்கள் வினியோகம் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் விராஜ்பேட்டை தாலுகா பொன்னம்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கே.ஜி. போப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைகளுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
இதை மாணவர்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். இதைதொடர்ந்து பொன்னம்பேட்டை அருகே பைலமண்டூரு கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கே.ஜி. போப்பையா எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு குப்பை சேகரிக்க பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கினார்.
அப்போது அவர், பொதுமக்களிடம் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும். வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும், மக்காதது என தரம் பிரித்து சேகரித்து கொட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.