உப்பள்ளியில் கந்தசஷ்டி விழா கோலாகலம்

உப்பள்ளியில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உப்பள்ளியில் கேஷ்வாப்பூர் பவானி நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் சார்பாக வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் பி.எஸ்.ராஜேந்திரன் செய்திருந்தார். இதேபோல உன்கல் கிருபதுங்க பெட்டா மலைப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் தமிழர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி பூஜை விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story