தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா கண்ணீர்


தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா கண்ணீர்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா கண்ணீர் வடித்துள்ளார்.

தாவணகெரே-

தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா கண்ணீர் வடித்துள்ளார்.

தேர்தல் தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது. இதையடுத்து 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 இடங்களை பிடித்தது. இந்த தேர்தலில் பெரும்பாலான காங்கிரஸ் பிரமுகர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் பா.ஜனதாவில் பல பிரபலங்கள் தோல்வியை சந்தித்தனர். குறிப்பாக ஒன்னாளி தொகுதியை சேர்ந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா தோல்வியை தழுவினார்.

இந்த தோல்வி அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரால் வெளியே நடமாட முடியாமல் போனதாக கூறப்படுகிது. இந்தநிலையில் நேற்று ஒன்னாளி தொகுதியில் நடந்த வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக ரேணுகாச்சார்யா சென்றிருந்தார். அப்போது கட்சி தொண்டர்களிடம் அவர் அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.

போட்டியிட வில்லை

அதாவது, ஒன்னாளி தொகுதி மக்களுக்காக நான் இரவு பகலாக கஷ்டப்பட்டேன். ஆனால் அவர்கள் என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை. இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து கொடுத்திருக்கிறேன். இருப்பினும் மக்கள் என்னை மறந்துவிட்டார்கள். தேர்தலில் தோல்வியடைய வைத்துள்ளனர். இதை என்னால் மறக்க முடியவில்ைல.

இனி தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை. கட்சி யாரை நிறுத்துகிறதோ அவர்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன். இன்று (நேற்று) கூட ரூ.14 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கியுள்ளேன். இந்த பணிகள் தொடரும் என்று தொண்டர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்.


Next Story