அமித்ஷாவை நானே திட்டமிட்டு நிராகரித்தேன்


அமித்ஷாவை நானே திட்டமிட்டு நிராகரித்தேன்
x

தன்னை சந்திக்க பலமுறை முயற்சித்த அமித்ஷாவை தான் திட்டமிட்டு நிராகரித்ததாக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு:-

ஜனார்த்தன ரெட்டி

கொப்பல் மாவட்டம் கங்காவதியில் நேற்று கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜனார்த்தன ரெட்டி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக என்னை பல முறை சந்திக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முயன்றார். ஆனால் நானே திட்டமிட்டு, அவரை சந்திப்பதை நிராகரித்தேன். இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை தூரத்திலேயே வைத்திருந்தேன். பா.ஜனதாவில் என்னை மீண்டும் சேர்த்து கொள்ளும்படி எந்த தலைவரின் வீட்டுக்கும் நான் செல்லவில்லை.

காங்கிரசுக்கு ஆதரவாக...

பா.ஜனதாவில் இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், நான் ஒருவனே சமமானவன். 100 எம்.எல்.ஏ.க்கள் செய்ய கூடிய வேலையை நான் ஒருவனே செய்து முடித்து காட்டுவேன்.

கங்காவதி மற்றும் பல்லாரி வளர்ச்சிக்காக சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்து குரல் எழுப்புவேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்தவர், எனது தொகுதியில் செய்து காட்ட முடியாத வளர்ச்சி பணிகளை நான் செய்து முடிப்பேன். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைய என்னுடைய கட்சியும் முக்கிய காரணமாகும். பா.ஜனதா வெற்றி பெற வேண்டிய 20 தொகுதிகள், எங்களது கட்சியால் தோல்வி அடைந்திருக்கிறது. எங்கள் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக மாறி இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story