வாலிபர் கொலையில் கைதானவருக்கு ஜாமீன்
வாலிபர் கொலையில் கைதானவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் பகுதியை சேர்ந்த முகமது பாசில் (வயது 22). இவரை மர்மநபர்கள் கடந்த ஜூலை 28-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூரத்கல் போலீசார் ஹர்ஷித் உள்பட 8 பேரை கைது செய்திருந்தனர்.
இதில் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் ஹர்ஷித் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைதான அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு ஹர்ஷித் தரப்பில் மங்களூரு மாவட்ட 3-வது செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ஹர்ஷித்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Related Tags :
Next Story