மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் என தகவல்...!

மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மக்களவையில் மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய இணைமந்திரி ஜித்தேந்திர சிங், 2021 மார்ச் செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி மத்திய அரசுக்கு கீழ் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 327 பணியிடங்கள் காலியாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர் நடவடிக்கை எனக் குறிப்பிட்ட மத்திய இணைமந்திரி ஜித்தேந்திர சிங் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்திய குடிமைப் பணிகளில் 1472 காலிப்பணியிடங்கள் உள்ளது மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.