தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும்- அமித்ஷா

ல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது ;
தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும். ஒரு நாடு ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது, சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை.
தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர். புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் இது ஈர்க்கும். கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்