ராகுல்காந்திக்கு தேசிய கொடியை பரிசாக அனுப்பிய காங்கிரசார்


ராகுல்காந்திக்கு தேசிய கொடியை  பரிசாக அனுப்பிய காங்கிரசார்
x

ராகுல்காந்திக்கு தேசிய கொடியை பரிசாக காங்கிரசார் அனுப்பினர்.

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பாதயாத்திரை தொடங்குகிறார். கர்நாடகத்தில் 511 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்லும் அவர் ராய்ச்சூர் வழியாக தெலுங்கானா மாநிலத்துக்கு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரசார் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாதயாத்திரையின்போது ராகுல் காந்தி கையில் ஏந்தி செல்வதற்காக கர்நாடக காங்கிரசார் சார்பில் ஒரு தேசிய கொடி பரிசாக அவருக்கு வழங்கப்படுகிறது. அந்த தேசிய கொடி தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே பெண்டிக்கேரியில் உள்ள காதி கிராம சுய தொழில் மையத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதை மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் மற்றும் தார்வார் மாவட்ட காங்கிரசார் ராகுல்காந்திக்கு அனுப்பி உள்ளனர்.


Next Story