பஞ்சாயத்து பெண் ஊழியரை தாக்கிய தொழிலாளி கைது

பண்ட்வால் அருகே பஞ்சாயத்து பெண் ஊழியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா புனச்சா கிராம பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அதே பகுதியை சோ்ந்த உஸ்மான் (வயது 53) என்பவர் வேலை விஷயமாக சென்று இருந்தார்.
அப்போது அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவரிடம் அவர் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் அவரை ஊஸ்மான் தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் காயம் அடைந்தார்.
இதையடுத்து உஸ்மான் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண் விட்டலா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உஸ்மானை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story