உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நாளை 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கம்' தொடக்கம் !

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதுடெல்லி,
'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' என்ற உலகளாவிய இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம், நாளை மாலை 6 மணிக்கு தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கிளாஸ்கோவில் நடந்த காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியால் சுற்றுச்சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான யோசனைகளை அழைக்கும் 'லைஃப் குளோபல் கால் ஃபார் பேப்பர்ஸ்' என்ற என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள், சூழல் உணர்வுள்ள வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பல கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்கும் வகையில், இந்த இயக்கம் தொடங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் பில் - மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவர் பில் கேட்ஸ் பங்கேற்கிறார். மேலும், உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.