10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை இன்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார் .
புதுடெல்லி ,
பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை இன்று காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுகிற 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்ட்டன
பின்னர் பேசிய பிரதமர் மோடி ;
இந்தியா இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலகின் பல பெரிய பொருளாதாரங்கள் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் போராடி வருகின்றன என்பது உண்மைதான்... 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் நீங்காது.இருந்தபோதிலும், இந்தியா, முழு பலத்துடன், புதிய முயற்சிகள் மற்றும் சில அபாயங்களுடன், உலகளாவிய நெருக்கடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது.
உங்களின் ஒத்துழைப்பால் இதுவரை எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கடந்த 8 ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தில் தடைகளை ஏற்படுத்திய பிரச்சனைகளை குறைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.