மக்களவையில் பிரதமர் மோடி உரை

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசி வருகிறார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கிறேன். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசி வருகிறார்.
Live Updates
- 8 Feb 2023 5:16 PM IST
காங். வீழ்ச்சி குறித்து பல்கலை. ஆய்வு செய்யும் - பிரதமர் மோடி
ராகுல் பேசும் போது அவை கொதிப்புடன் காணப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு,அவர்களின் தரத்தை காட்டுகிறது. வருங்காலத்தில் காங்கிரசின் வீழ்ச்சி குறித்து உலக பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்யும் என பிரதமர் மோடி கூறினார்.
- 8 Feb 2023 4:44 PM IST
"கொரோனா தடுப்பூசி - இந்தியா முதலிடம்" மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
உலகளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது.
- 8 Feb 2023 4:39 PM IST
டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன - பிரதமர் மோடி
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்தவித தீவிரவாதமும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக உள்ளது.
- 8 Feb 2023 4:35 PM IST
உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா - பிரதமர் மோடி பெருமிதம்
கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தி உள்ளோம். உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா. பெருந்தொற்று போன்ற அனைத்தையும் தாண்டி நம் நாடு முன்னேறி வருகிறது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பு இந்தியா சாதித்தது. இந்தியா உற்பத்தி நாடாக மாறிக்கொண்டிருப்பதை உலகநாடுகள் பார்த்து வருகின்றன.
- 8 Feb 2023 4:28 PM IST
ராகுல்காந்தி மக்களவையில் இல்லாததை குறிப்பிட்டு நையாண்டி செய்கிறார் - பிரதமர் மோடி
தி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி பதிலுத்து வருகிறார்:- அதில்,
"தொலைநோக்கு சிந்தனையுடன் ஜனாதிபதி தனது உரையை வழங்கியிருக்கிறார். அவரது உரை நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் உள்ளது.
இல்லாத விஷயத்தை குறிப்பிட்டு மக்களவையில் ராகுல்காந்தி நையாண்டி செய்கிறார். காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற குழுத்தலைவரை அவமானம் செய்தார். ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர். சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும், புரிதலும் குறைவாக இருப்பது தெரிய வருகிறது.
- 8 Feb 2023 4:22 PM IST
பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்த ஜனாதிபதி திரவுபதி முர்மு - பிரதமர் மோடி
நாடாளுமன்ற பேச்சு மூலம் பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதைத்தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர். ராகுல்காந்தி இல்லாததை குறிப்பிட்டு மக்களவையில் நையாண்டி செய்கிறார். ஊடகங்களில் வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்தி கொள்கின்றனர்.
- 8 Feb 2023 4:13 PM IST
மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்தநிலையில், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.