ரெயில்வே தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? - கால அட்டவணை வெளியீடு


ரெயில்வே தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? - கால அட்டவணை வெளியீடு
x

35 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ரெயில்வே தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்பது குறித்து கால அட்டவணை வெளியிடப்பட்டது.

புதுடெல்லி,

பல்வேறு மண்டல ரெயில்வே மற்றும் உற்பத்தி துறைகளில் 35,281 காலியிடங்களுக்கு ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) தேர்வுகள் நடத்தியுள்ளது. மொத்தமுள்ள 21 ஆர்.ஆர்.பி. தேர்வுகளில் 17-க்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மீதமுள்ளவற்றுக்கான முடிவுகள் வெளியிடப்படும் கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டு உள்ளது. இதில் 5-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் 3-வது வாரத்துக்குள் வெளியிடப்பட்டு, அடுத்த மாதம் 2-வது வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்த்தலும், மருத்துவ பரிசோதனையும் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் வாரத்துக்குள் பணியில் சேரலாம்.

4-ம் நிலைக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2-ம் வாரத்துக்குள் வெளியிடப்படும். பிப்ரவரி முதல் வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்டு, அதே மாதம் 4-வது வாரத்துக்குள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். 3-ம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மார்ச் முதல் வாரத்துக்குள் முடிக்கப்படும். 2-ம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அதே மாதம் 4-ம் வாரத்துக்குள் முடிவடையும் என ரெயில்வே கூறியுள்ளது.


Next Story