இளம்பெண்ணை கற்பழித்து 5 முறை கருக்கலைப்பு செய்து மிரட்டல்-போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு வலைவீச்சு


இளம்பெண்ணை கற்பழித்து 5 முறை கருக்கலைப்பு செய்து மிரட்டல்-போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு வலைவீச்சு
x

இளம்பெண்ணை கற்பழித்து 5 முறை கருக்கலைப்பு செய்து மிரட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு: இளம்பெண்ணை கற்பழித்து 5 முறை கருக்கலைப்பு செய்து மிரட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

போலீசில் புகார்

தாவணகெரேயில் 25 வயது மதிக்கத்தக்க பி.எட் படித்த இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், உறவினர்களுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தகராறு ஏற்பட்டது. நிலத்தகராறு தொடர்பாக தாவணகெரேயில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது அங்கு பணியாற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் என்பவர் நிலத்தகராறு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

5 முறை கருக்கலைப்பு

இதனால் எங்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ், என்னுடன் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். இதனால் நான் கர்ப்பமானேன். ஆனால் கருக்கலைப்பு செய்ய வைத்தார். அதன்படி 5 முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ய வைத்தார். மேலும் மகேசுக்கு திருமணமாகி 2 மனைவிகள் இருப்பதும் தெரியவந்தது.

அப்போது அவர், தன்னை 3-வது மனைவியாக ஆக்கி கொள்வதாக கூறினார். இதற்கு நான் சம்மதிக்கவில்லை. ஆனால் அவர் சம்மதிக்காவிட்டால் நிலப்பிரச்சினையை பெரிதாக்கி உறவினர்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும், பொய் வழக்கு போடுவதாகவும் தன்னை மிரட்டுகிறார். தற்போது மகேஷ், செல்லக்கெரே போலீஸ்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

வலைவீச்சு

இந்த புகாரை ஏற்ற செல்லகெரே மகளிர் போலீசார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதுகுறித்து சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் கூறுகையிலர், 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேசை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.


Next Story