பெங்களூருவில் ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் மீட்பு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் ரூ.1½ கோடி எம்.டி.எம்.ஏ. மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பசவனகுடி:-
பெங்களூரு பசவனகுடி அருகே எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் பகுதியில் பொது இடத்தில் வைத்து போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக பசவனகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை விரட்டி பிடிக்க போலீசார் முயன்றனர். ஆனால் அதற்கு அந்த நபர் தான் கையில் வைத்திருந்த பையை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உடனே போலீசார் அதை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் போதைப்பொருட்கள் இருந்தன. இதையடுத்து பையில் இருந்த ரூ.1½ கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story