டேங்கர் லாரி மோதி விவசாயி சாவு


டேங்கர் லாரி மோதி   விவசாயி சாவு
x

டேங்கர் லாரி மோதி விவசாயி பலியானார்.

பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்தப்பா. விவசாயியான இவர் கொப்பல் மாவட்டம் குஷ்டகி புறநகர் பகுதியில் தங்கி 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வந்தார். நேற்று காலையில் அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக குஷ்டகி புறநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அவர் சாலையோரம் ஆடுகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த ஒரு டேங்கர் லாரி தாறுமாறாக ஓடி சித்தப்பா மீது மோதியது. மேலும் ஆடுகள் கூட்டத்திலும் புகுந்தது. இதில் சித்தப்பா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 17 ஆடுகளும் செத்தன.


Next Story