விஜயாப்புரா விமான நிலையம் பிப்ரவரிக்குள் திறக்கப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


விஜயாப்புரா விமான நிலையம் பிப்ரவரிக்குள் திறக்கப்படும்-  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x

விஜயாப்புரா விமான நிலையம் பிப்ரவரிக்குள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் மடாதிபதி சித்தேஸ்வரா ஆஸ்பத்திரியை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்து பேசியதாவது:-வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 3-வது கட்ட கிருஷ்ணா மேலணை திட்டத்தை செயல்படுத்த கோர்ட்டின் அனுமதி கிடைக்கும். இந்த திட்டத்தால் மூழ்கும் கிராம மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்படும். வருகிற மார்ச் மாதத்திற்குள் ரூ.10 ஆயிரம் கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திராட்சை பழ மேம்பாட்டிற்காக ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்படடுள்ளது. கர்நாடகத்தில் தென் கர்நாடகம் மற்றும் வட கர்நாடகத்தில் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

வட கர்நாடகத்தில் ஹம்பி, பாதாமி, பட்டதகல்லு ஆகிய தலங்கள் மேம்படுத்தப்படும். இங்கு உலக தரத்தில் வசதிகள் செய்யப்பட்டு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கவரப்படுவார்கள். விஜயாப்புரா விமான நிலையத்தை மேம்படுத்த ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் விமான நிலையம் திறக்கப்படும். பிரதமர் மோடியால் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விமான நிலையத்திற்கு பசவேஸ்வரா பெயர் சூட்டப்படும். அரசு-தனியார் பங்களிப்பில் விஜயாப்புராவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story