திருமண விழா: பக்வந்த் மான் - குர்ப்பீத் கவுர் தம்பதிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வாழ்த்து...!


திருமண விழா: பக்வந்த் மான் - குர்ப்பீத் கவுர் தம்பதிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் வாழ்த்து...!
x

மருத்துவர் குா்பிரீத் சிங்கை எளிமையான முறையில் பகவந்த் மான் இன்று திருமணம் செய்து கொண்டார்.

சண்டிகர்,

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் - மருத்துவர் குா்பிரீத் சிங் திருமணம் இன்று சீக்கிய பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக 48 வயதான பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் மருத்துவர் குா்பிரீத் சிங்(30 வயது) இடையேயான திருமணம் குறித்து நேற்று திடீரென அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மருத்துவர் குா்பிரீத் சிங்கை சண்டீகரில் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் பகவந்த் மான் இன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பக்வந்த் மான் - குர்ப்பீத் கவுர் தம்பதிக்கு, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவரது குடும்பத்துடன் நேரில் சென்று திருமண வாழ்த்து தெரிவித்தார். அப்போது பக்வந்த் மானை அரவிந்த் கெஜ்ரிவால் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story