செல்லப் பெண் குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசு


செல்லப் பெண் குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசு
x

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நினைவுகள் பசுமையானது. தன் குழந்தைகளின் பிறந்த நாளை மகிழ்ச்சியான நாளாக மாற்றுவது பெற்றோர்களின் கடமையாகும். பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பார்கள். பெண் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுத்து சிறப்பானதாக ஆக்கலாம் என்பதை பார்ப்போம்.

பொதுவாக குழந்தைகளை பிறந்த நாளில் கோவில், கடற்கரை, உணவகம், திரையரங்கம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். இதோடு படிப்பில் ஆர்வத்தை வளர்ப்பதற்காக புத்தகங்களை பரிசாக அளிக்க தவறாதீர்கள். ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பம் படிப்பதற்கு சமம் என்று சொல்லுவார்கள்.

பொம்மை வைத்து விளையாடுவதில் பெண் குழந்தைகளுக்கு தனி விருப்பம் உண்டு. அம்மா தனக்கு என்னவெல்லாம் செய்கிறாரோ அவற்றை தான் வைத்திருக்கும் பொம்மைக்கும் செய்து மகிழும் பெண் குழந்தைகளை பார்த்திருக்கிறோம். உங்கள் செல்ல மகளின் பிறந்த நாள் பரிசாக மென்மையான டெட்டி பொம்மை, நாய் அல்லது பூனை குட்டி பொம்மை, பார்பி பொம்மை அல்லது உங்கள் குழந்தை விரும்பும் விலங்குகளின் பொம்மையை வாங்கி கொடுக்கலாம். பெண் குழந்தைகள் மென்மையான பொம்மைகள் தான் வைத்து விளையாட வேண்டும் என்றில்லை. எனவே அவர்களுக்கு கார் பஸ், ட்ரக்பொம்மைகளையோ, ஏரோப்லேன், கப்பல் போன்ற பொம்மைகளையும் வாங்கி கொடுக்கலாம்.

எல்லா பெண் குழந்தைகள் இயல்பாகவே ஆடைகள், வளையல், கம்மல், காலணிகள் போன்றவற்றை விரும்புவார்கள். சில பெண் குழந்தைகள் அதில் மிகுந்த விருப்பம் கொண்டிருப்பார்கள். அத்தைகையே பெண் குழந்தையை பெற்றவரா நீங்கள். அப்படியென்றால் உங்கள் குழந்தை என்ன நிறத்தில் என்ன வகையான ஆடை அணிகலன்களை விரும்புகிறாள் என்பதை கவனியுங்கள். அந்த மாதிரியான ஆடை, பை, அணிகலன்கள், காலனி போன்றவற்றை பிறந்த நாள் பரிசாக கொடுத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துங்கள்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். சில பெண் குழந்தைகள் கையில் எந்த பொருள் கிடைத்தாலும் சுவற்றில், தரையில் எதையாவது வரைந்து கொண்டே இருப்பார்கள். அப்படி பட்ட குழந்தைகளுக்கு ஓவியம் வரையும் பொருட்களை பரிசாக கொடுங்கள். உங்கள் மகளின் கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்துங்கள். பிறந்த நாளில் குழந்தைகளுக்கான ஓவியப் பள்ளியில் சேர்த்தும் விடலாம். யாருக்கு தெரியும் எதிர்காலத்தில் மிக பெரிய ஓவிய கலைஞராக வரலாம்.

சில பெண் குழந்தைகள் தொலைக்காட்சியில் வரும் விளம்பர பாடல், திரைப்பட பாடல் போன்றவற்றை மழலை மொழியில் தானாக பாடுவார்கள். அந்த குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக வழக்கமான கொண்டத்தோடு இசை பாடல் தொகுப்பு, இசை கருவி போன்றவற்றை பரிசாக கொடுங்கள். இசை வகுப்புகளிலும் சேர்த்துவிடலாம்.

சில பெண் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அவர்கள் விரும்பும் விளையாட்டு பொருட்கள் ஸ்கேட்டிங் ரோலர், கிரிக்கெட் பேட், டென்னிஸ் பேட், மிதி வண்டி, போன்றவற்றை பிறந்த நாள் பரிசாக கொடுத்து மகிழ்ச்சி அளியுங்கள்.

எல்லா குழந்தைகளுக்கும் தங்கள் பெற்றோர் தான் முதல் ஹீரோ என்பார்கள். எனவே அவர்கள் பிறந்த நாள் ஆடை எதுவோ அதே நிறம் மற்றும் டிசைனில் நீங்களும் ஆடை தைத்து அணிந்து கொள்ளுங்கள். அந்த பிறந்த நாள் அந்த குழந்தையின் மனதில் என்றும் பசுமையாக இருக்கும்.

உங்கள் ஆசை மகளின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி என்றும் நினைவில் நிற்கும் வண்ணம் செய்யுங்கள்.


Next Story