வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவிேயற்பு விழா

Merchants Association Inauguration Ceremony of New Executives
தக்கலை:
பத்மநாபபுரம் நகர வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ேபரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டார்.
புதிய நிர்வாகிகள்
பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தக்கலையில் உள்ள லலிதா மகால் திருமண மண்டபத்தில் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர், இணை செயலாளர் விஜயன், மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் விஜயகோபால் வரவேற்று பேசினார்.
ெதாடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். தலைவராக ஜெகபர் சாதிக், பொதுச்செயலாளராக விஜயகோபால், பொருளாளராக தாணுமூர்த்தி, துணைத்தலைவர்களாக சண்முகம், சுரேஷ்குமார், செயலாளர்களாக மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவ தலைவராக ஆனந்தம் சி.குமார், செயற்குழு உறுப்பினர்களாக ஜெயகுமார், பத்மதாஸ், ஹமாம், ஸ்ரீராம், ஹரி பாலாஜி, வர்க்கீஸ், இளங்கோ, ஜலால், சங்கரமூர்த்தி, ஜூட்ஸ் பெர்லின், சேத்திரபாலன், ராஜூ, செய்தி தொடர்பாளராக ஜோஸ்வா ஆகியோர் பதவியேற்றனர்.
விக்கிரமராஜா
விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். வியாபாரிகள் பல கஷ்டங்கள், நஷ்டங்களை சந்தித்து வியாபாரம் செய்கிறார்கள். வணிகவரிதுறை, உணவு பாதுகாப்பு துறை போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளை சட்டரீதியாக நாம் சந்திக்க வேண்டும்.
இதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை முடக்கும் விதமாக முதலில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்தார்கள். அதை வியாபாரிகள் ஓட்டல்கள், டீக்கடை போன்றவற்றிற்கு வியாபாரம் செய்தனர்.
இளம் தொழில் முனைவோர் அமைப்பு
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விற்கிறார்கள். இதனால் நம் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முடிவுகட்டுவதற்காக இளம் தொழில் முனைவோர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நம் குறைகளை அரசிடம் முறையிடுவோம். அதற்கு செவிசாய்க்கவில்லை என்றால் போராடுவோம். நமக்குள் ஒருவருக்கு பிரச்சினை என்றால் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நெல்லை மாவட்ட தலைவர் சின்னதுரை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், மண்டல தலைவர் வைகுண்டராஜன், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், ஆணையர் லெனின், தேர்தல் அதிகாரி முருகேசன், சமூகசேவகர் தக்கலை சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் சங்க தலைவர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டனர்.