1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; சுமைதூக்கும் தொழிலாளி கைது


1½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; சுமைதூக்கும் தொழிலாளி கைது
x

Arrested

திண்டுக்கல்

திண்டுக்கல் பகுதியில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்பட்டி- வத்தலக்குண்டு சாலையில் எம்.வாடிப்பட்டி பிரிவு பகுதியில் வந்த சரக்கு வேனை நிறுத்தினர்.

இதற்கிடையே போலீசாரை கண்டதும் சரக்கு வேனில் வந்த 2 பேர் தப்பியோடிவிட்டனர். வேனில் வந்தவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அதைத்தொடர்ந்து சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக 1½ டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேன், ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கம்பூரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் (வயது 46) என்பதும், தப்பி ஓடியது மேலூர் தாலுகா கருங்காலக்குடியை சேர்ந்த சரக்கு வேன் உரிமையாளர் கண்ணன், டிரைவர் செல்வம் என்பது தெரியவந்தது.

மேலும் சுரேஷ், எம்.வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து வெளிமாநிலத்திற்கு கடத்திச் சென்றுகொண்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story