தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்தமுதியவரை மீட்ட ஆசிரியருக்கு பாராட்டு


தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்தமுதியவரை மீட்ட ஆசிரியருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்த முதியவரை மீட்ட ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள பக்கிள் ஓடையில் நேற்று முதியவர் ஒருவர் தவறி விழுந்து வெளியேற முடியாத நிலையில் மயங்கி கிடந்து உள்ளார். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி அசோக்நகரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் நிர்மல்ராஜ் என்பவர் உடனடியாக கழிவுநீர் தேங்கி கிடந்த பக்கிள் ஓடைக்குள் இறங்கினார். மேலும் அங்கு இருந்தவர்கள் உதவியுடன் முதியவரை மீட்டார். தொடர்ந்து மீட்கப்பட்ட முதியவரை ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதியவரை மீட்ட பள்ளி ஆசிரியர் நிர்மல்ராஜை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.


Next Story