பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ரூ.1½ கோடியில் சீரமைப்பு பணி


பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ரூ.1½ கோடியில் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 12 July 2023 12:45 AM IST (Updated: 12 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ரூ.1½ கோடியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்தது.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குளத்தில் ரூ.1½ கோடியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு செய்தது.

பிறவிமருந்தீஸ்வரர் கோவில் குளம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையிலான சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு தலைமை கொறடா நிருபர்களிடம் கூறுகையில்,

திருத்துறைப்பூண்டி பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு

கள ஆய்வின் போது 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள்மீது 100 சதவீதம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகரசபை தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நகராட்சி துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராமு, பிறவி மருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

மக்கள் பிரச்சினையை தீர்க்கும் குழு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழுவின் தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள் அய்யப்பன், கந்தசாமி, சுந்தரராஜன், பாபு, பொன்னுசாமி, ராதாகிருஷ்ணன், முத்துராஜா, சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், சட்ட மன்ற பேரவை துணை செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு தலைமை கொறடா பேசியபோது, 'சட்டமன்ற மனுக்கள் குழு பொதுமக்களின் பிரச்சினையை நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு குழுவாக செயல்படுகிறது' என்றார்.

முன்னதாக வடபாதி மங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவது குறித்தும், கூத்தாநல்லூர் ரகுமானிய தெருவில் உள்ள ஐந்து கிணறு குளத்தை அக்கிரமிப்பு அகற்றி தூர்வாருவது குறித்தும், திருவாரூர் நகரம் புகையிலை தோட்டப் பகுதியில் சாலை அமைப்பது குறித்தும், மருதப்பட்டினம் நடைபாலம் பகுதியில் சாலை அமைப்பது குறித்தும் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story