11 கிலோ கஞ்சா பறிமுதல்

கார், மோட்டார்சைக்கிள்களில் கடத்திய 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
கார், மோட்டார்சைக்கிள்களில் கடத்திய 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தொட்டியபட்டி சாலையில் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெங்கடேஷ் குமார் (வயது 34), சிவகுமார் (34) என்பது ெதரியவந்தது.
கார் பறிமுதல்
மேலும் காரில் 8 கிேலா கஞ்சாவும், மற்றொரு மோட்டார்சைக்கிளில் 1 கிலோ கஞ்சாவும் 2 பேர் கடத்தி வருவதாக கூறினர்.
அதன்பேரில் சந்தனம் (37), நல்லமாயன் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் காரில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா மற்றும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் இருந்த 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய 2 மோட்டார்சைக்கிள்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.