சமையல் கியாஸ் மூலம் இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல்


சமையல் கியாஸ் மூலம் இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல்
x

திருப்பத்தூரில் சமையல் கியாஸ் மூலம் இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்கள் முறைகேடாக ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆட்டோ கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வாகங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன.இதனையடுத்து திருப்பத்தூர்மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் எம் எஸ் இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எம்.பி. காளியப்பன், ராமகிருஷ்ணன், திருப்பத்தூர், வாணியம்பாடி, மற்றும் செயலாக்கம் (என்போர்ஸ்மேன்ட்) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரதீபா தலைமையில் கூட்டுத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ரராகவன், விஜயகுமார், சிவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஆய்வு செய்ததில் அனுமதிக்கு புறம்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் பொருத்தி, எரிபொருளாக ஆட்டோவை இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டக்கூடாது. இது போன்ற ஆட்டோக்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றனர்.


Next Story